#BREAKING | ஈரோடு  இடைத்தேர்தல் | முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., கொண்ட பெரும் படையை களமிறங்கிய அமமுக!  - Seithipunal
Seithipunal



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில், இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனது வேட்பாளராக சிவபிரசாந்த்-யை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து டிடிவி தினகரன் விடுத்துள்ள அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "நடைபெறுகிற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கழக துணை பொதுச்செயலாளரும், திருப்பூர் நகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான சி சண்முகவேலு தலைமையில் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்களாக கீழ்காண்பவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் பணி குழுவில் இடம் பெற்றுள்ள முக்கிய பொறுப்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு :

முன்னாள் அமைச்சர்கள் செந்தமிழன், பாண்டுரங்கன், வளர்மதி  ஜெபராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவபெருமாள், முருகன், துரை மணிவேல், வேதாச்சலம், கோமகி மணியன், ஏழுமலை, ஆறுமுகம், தொட்டியம் ராஜசேகரன், சிவசாமி, சீனிவாசன், மொளச்சூர் பெருமாள், கணபதி, ரோகினி கிருஷ்ணகுமார், சுந்தரராஜ் ,கதிர்காமு, முருகன், பார்த்திபன், செல்வம், ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Announce erode b election 2023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->