பாஜக தலைவர் அமித் ஷா வேட்புமனு தாக்கல் செய்தார்.! இந்த தொகுதியிலா?! உற்சாக வெள்ளத்தில் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இந்த மக்களவை தேர்தலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்கள் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் இன்று போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில், இதுவரை பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி  பெற்று உள்ளார். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு பதிலாக பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமித் ஷா அவர்கள் முதல் முறையாக போட்டியிடுகிறார் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வேட்பு மனு தாக்கலுக்கு தயாரான அமித் ஷா, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின், தனது தொண்டர் படையுடன் ஊர்வலமாக சென்று காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMITSHAH NOMINATION IN GANDHI NAGAR


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->