தமிழகத்தில் அமித்ஷா சந்திக்க போகும் முக்கிய புள்ளிகள் யார்., யார்?! வெளியானது முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


67 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதியம் தமிழகம் வருகிறார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பயண விவரம், அவர் சந்திக்க உள்ள நபர்கள் குறித்து வெளிய தகவலின் படி,

* காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.

* பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு தமிழக அரசு மற்றும் பாஜக கட்சி சார்பில் வரவேற்பளிக்கப்படுகிறது.

* பிற்பகல் 1.55 மணிக்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் என்ற தனியார் நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

* மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை தமிழக அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும், 380 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பக்கப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். 67 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம், சென்னை வர்த்தக மைய விரிவாக்கம், இந்திய ஆயில் நிறுவன திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலமாக அடிக்கல் நாட்டுகிறார்.

* மாலை 6.20 மணி முதல் லீலா பேலஸுக்கு வரும் அமித்ஷா, பாஜக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதனைத்தொடர்ந்து, கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சி, சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 

* நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். 

* இது தவிர, திமுகவிலிருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி, கேபி ராமலிங்கம் இன்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கேபி ராமலிங்கம் முக அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit shah tn program list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->