இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால், இந்தியா வல்லரசாக மாறும்! அமித் ஷா தகவல்!! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை முழுமையாக இணைக்கவே, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் அமித் ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியவை,  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஜம்மு காஷ்மீரை பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

630 சமஸ்தானங்கள் கொண்ட இந்தியாவை முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஒருங்கிணைத்தார். அன்று ஜம்மு காஷ்மீர் விடுபட்டுபோனது. இப்போது அந்த குறை நீக்கப்பட்டு உள்ளது.

போதை பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட பிரச்சனைகளால் இந்தியா திணறி கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு உள்நாட்டில் தீர்வு காணாமல் இந்தியா, ஒரு வளர்ந்த நாடாக உருவெடுக்கவே முடியாது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit shah says kashmir issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->