நான் பதவி விளக்க தயார்., மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கூச்பெஹார் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேற்குவங்க மக்கள் தன்னை ராஜினாமா செய்யசொன்னால், நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்து இருக்கிறார்.

மேற்கு மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், நான்கு பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிவருகிறார்.

இந்நிலையில், நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமிர்ஷா தெரிவிக்கையில்,

"நடந்து வரும் மாநில சட்டசபை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடையும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலக போவது உறுதி. கூச்பெஹார் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மேற்குவங்க மக்கள் தன்னை ராஜினாமா செய்யசொன்னால், நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்." என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்து இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amit shah reply to mamta


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->