ஆளும் கட்சிக்கே எனது ஆதரவு.! அகிலேஷ் யாதவ் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அதே சமயத்தில் பாஜக இந்த முறை மேற்குவங்கத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆகவேண்டும் என்ற கணக்கில், சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இரண்டுமுறை அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதேபோல், பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா தீவிர அரசியல் பயணத்தை மேற்கொண்டுள்ளார். பாஜகவின் இந்த தீவிர அரசியல் பிரச்சாரத்தின் பயனாக, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்து உள்ளனர். மேலும் பலர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னணி கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "மேற்குவங்காள சட்டமன்ற பொதுத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். பாஜகவை தோற்கடிக்கவே எனது ஆதரவை அவருக்கு அளிக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

akhilesh yadav mamta


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->