மகாராஷ்டிர அரசியலில் மெகா திருப்பம்.! துணை முதல்வர் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலத்தில் நீண்ட குழப்பத்துக்கு பிறகு சிவசேனா தலைவர் உதவிதாக்கரே நேற்று முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். இந்தநிலையில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய பிறகு, அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தற்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் துணை முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவிகளுக்கு கடும்போட்டி நிலவி வருகிறது. இதானால் அஜித்பவாரை துணை முதலமைச்சரானால், புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற குழு தலைவர் ஜெயந்த் பாட்டீலுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்கும்பட்சத்தில் துணை முதல்வர் பதவி வழங்கப்பட வாய்ப்பில்லை என தெரிகிறது. 

இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட மூன்று கட்சிகளின் கூட்டணி அரசு மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய பிறகு அஜித் பவார் துணை முதலமைச்சராக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith pawar has again deputy cm in maharashtra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->