முன்னாள் முதலமைச்சர் காலமானார்... சோகத்தில் அரசியல் தலைவர்கள்.!! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முதுபெரும் அரசியல் தலைவர் அஜித் ஜோகி (வயது 74) உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவி வகித்தவர் அஜித் ஜோகி. மத்திய பிரதேசத்தில் இருந்து 2000-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உதயமானது.

1980களில் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவர் அஜித் ஜோகி. ராஜீவ் காந்தி பிரதமரான பின்னர் 1985-ல் தீவிர அரசியலில் குதித்தார் அஜித் ஜோகி.

காங்கிரஸ் கட்சியில் பழங்குடி இனதலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அஜித் ஜோகி. 2016-ல் காங்கிரசில் இருந்து வெளியேறி, ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற தனிகட்சி தொடங்கினார் அஜித் ஜோகி.

உடல்நலக் குறைவால் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார் அஜித் ஜோகி. இவரது மறைவுக்கு பல்லேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajit jigi passes away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->