அதிமுக - தமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.! எத்தனை தொகுதிகள்.! வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திவருகிறது. நேற்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தைக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன், "அதிமுகவுடன் நாங்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களை வகுத்துள்ளது. நிச்சயமாக சட்டப்பேரவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும்." என்று தெரிவித்திருந்தார்.

சென்னையில் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிமுக தரப்பில் 3 தொகுதிகளை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK TMC ALLIANCE 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->