ஓபிஎஸ்-ஐ சரிசெய்து இபிஎஸ் வகுத்த தேர்தல் வியூகம்! உருவாக்கப்பட்ட புதிய அணி!! - Seithipunal
Seithipunal


வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தலை கருத்தில் கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்குதல் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என தமிழக அரசியல் களம் தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. ஒரு தரப்பினர் ஈபிஎஸ் என்றும் ஒரு தரப்பினர் ஓபிஎஸ் என்றும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவில் யாரும் பேசக்கூடாது கட்சித் தலைமை உத்தரவிட்டது. 

இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரண்டு அணிகளையும் சரிசெய்து தேர்தல் வியூகங்களை வகுக்கும் வேலையை எஸ்எம்எஸ் என்ற டீமிடம் ஒப்படைத்துள்ளனர். அதிமுகவில்  ஓபிஎஸ், இபிஎஸ் மற்ற அமைச்சர்கள் யாராக இருந்தாலும், மூன்று பேர் கொண்ட எஸ்எம்எஸ் டீமுக்கு தெரியாமல் எதையும் பேசக் கூடாது என உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த எஸ்எம்எஸ் அணிக்கு கட்டுப்படுவதாக ஓபிஎஸ் ஒப்புக்கொண்டாலும், அவரது ஆதரவாளர்கள் தற்போது முணு முணுத்து  வருவதாக கூறப்படுகிறது. கட்சியின் சீனியர்கள் பலரும் கட்சியில் இல்லாத யாரோ மூன்று பேர் கூறுவதை நாம் ஏன் கேற்க வேண்டும் எனவும் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk new team for sms


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->