எடப்பாடிக்கு எதிராக பேசி சர்ச்சையை கிளப்பிய அதிமுக எம்.பி..வைகைச்செல்வன் காட்டிய அதிரடி ..! - Seithipunal
Seithipunal


வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பபட்டன. 

இதைத்தொடர்ந்து, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் துறை சம்பந்தமான 3 வேளாண் மசோதாக்களையும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றினார். 2 வேளாண் மசோதா மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 2 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியதால் இரு மசோதாக்களும் சட்டமாகியுள்ளது. 

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டதிற்கு தமிழக முதலமைச்சர் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று வேளாண் சட்ட மசோதா குறித்து பேசிய மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதோடு நிலம் வைத்துள்ள விவசாயிகள் விவசாய பணியாளர்களாக மாறும் நிலை ஏற்படும், ஒப்பந்தம் அளவிலான விவசாயம் உலகளவில் தோல்வியடைந்த முறை என்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இதனால் பயன்பெறும் என பேசியிருந்தார்.

வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இருப்பது அதிமுகவுக்குள் குழப்பத்தியும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. 

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களில் விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சங்களும் கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனின் பேசியதால் அதிமுகவில் சர்ச்சை எழுந்தது. இதனால் கட்சிக்குள் பெரும் குழப்பம் உருவாகிது.  

இந்த நிலையில், அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் பேச்சு குறித்து விளமளித்துள்ள அதிமுக எம்.பி  வைகைச் செல்வன், வேளாண் மசோதாவின் நிறை குறைகளை பற்றி அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் பேசி உள்ளார். ராஜ்யசபாவில் வேளாண் மசோதா தொடர்பான எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனின் பேச்சு, அதிமுகவின் குரல் அல்ல என தெரிவித்தார்.

மேலும், வேளாண் மசோதாவின் நிறை, குறைகளை ஆராய்ந்தே தமிழக முதலமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், வேளாண் மசோதா இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுத்து விவசாய பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்க வகை செய்கிறது என வைகைச் செல்வன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk mp vaikaiselvan explain about balasubramaniyam parliament speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->