அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது. 

நேற்று மாலை பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்ததை தொடர்ந்து, மாலை முதலாகவே மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் வர தொடங்கியது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 75 கூட்டணி தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.

இதனையடுத்து, வரும் மே மாதம் 7 ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இராயப்பேட்டை தலைமை அலுலவகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது நடைபெறவுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA Members May 7 2021 Meeting on Chennai Royapettai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->