எப்போது நான் சசிகலா பின்னால் தான்.! அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அறிவிப்பால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


 

தற்போதைய சட்டமன்றத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் கள்ளக்குறிச்சி  சட்டமன்ற உறுப்பினர் பிரபு, விருத்தாச்சலம் தொகுதியின் உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கியின் உறுப்பினர் ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் ஆளும் அதிமுக அணிக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர்கள் சசிகலாவின் ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். 

ஆரம்பம் முதலே சசிகலாவுக்கு ஆதரவளித்து வரும் நிலையில் தற்பொழுது நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ததாகவும், அது மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து செயல்பட்டதாகவும் அக்கட்சியின் நிர்வாக பொறுப்பில் இருப்பதாகவும் கூறி அதிமுக  கொறடா தாமரை ராஜேந்திரனும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் கடந்த சில தினங்களுக்கு முன் சட்டப் பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து புகார் அளித்திருந்தனர். 

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர்கள் அளிக்கும் விளக்கமானது போதுமானதாக திருப்திகரமாக இல்லை என்றால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இவர்கள் மூவரும் அதிமுகவிற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்போ, சட்டமன்ற தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றால் நாங்க நிச்சயமாக அதிமுகவை தான் ஆதரிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்கள் .

இந்தநிலையில்  பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  பிரபு இதுவரை ஆளும்  அதிமுக அரசுக்கு எதிராக நாங்கள்  எங்கேயேயும் செயல்படவில்லை காரணம் இல்லாமலே எங்களை தகுதி நீக்கம் செய்ய முதல்வர்  எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார் தகுதி நீக்கம் புகார் குறித்து வரும் 6 ஆம் தேதி சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க  உள்ளோம்   தற்போது நடக்கும்  அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் நாங்கள் அதிமுக அரசுக்கு ஆதரவாக தான் வாக்களிப்போம்.அதிமுக அரசுக்கு எதிராக செயல்படவே மாட்டோம்  அதே போல தற்போது  பிரிந்து கிடைக்கும் அதிமுகவை  ஒன்றிணைத்து சசிகலா தலைமை ஏற்று  நடத்த வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு

இவ்வாறு  அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK MLA announces iam support to sasikala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->