#BREAKING | அதிமுக வேட்பாளர் யார்? எடப்பாடி பழனிசாமி விடுத்த தகவல்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? கேள்வி வலுத்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்ட நிலையில், தேமுதிக நேற்று தனது வேட்பாளரை அறிவித்தது.

இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தனது வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளது.

அதே சமயத்தில் அதிமுக தரப்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக ஈரோட்டில் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் சுமார் 8 மணி நேரம் நடைபெற்றது.

இன்றைய ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகிய நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் என்று, எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Erode East candidate EPS info


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->