பாஜக வேண்டாம்., தனித்து போட்டியிடலாம்?! அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு?! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து களமிறங்க உள்ளன.

இதேபோல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம் போட்டி வேட்பாளரை களம் இறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயத்தில் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இடுப்பறி நிலை வருகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பாக ஆறு பேர் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், தற்போது அது மூன்று பேராக குறைந்துள்ளது.

அதன்படி முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, அதிமுக மாணவரணி செயலாளர் நந்தகோபால், அதிமுக பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஈரோட்டில் முகாமிட்டுள்ள அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணி குழுவுடன் தீவிர ஆலோசனையை மேற்கொண்டார்.

பலமணிநேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக இல்லாமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தனித்து போட்டியிடலாம் என்று பேசப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனால், தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் களமிறங்குவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் பெண் வேட்பாளரை களம் இறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

எது எப்படியானாலும் இன்று மாலைக்குள் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்கிறது அதிமுக வட்டாரம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aiadmk erode bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->