இன்று இறுதி முடிவு.! ஓபிஎஸ்., இபிஎஸ் தலைமையில் ஒன்று கூடும் மாவட்டங்கள் .! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. மே மாதம் 2 தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன. மேலும், வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி வருகின்றது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் ஆகிவிட்டது. 

மேலும், பாஜக, தேமுதிக, தமாக, புதிய நீதி கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

முன்னதாக நேற்று ஒரே நாளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்த 8 ஆயிரத்து 200 பேருக்கும் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK District head meeting march 5


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->