சசிகலா சிறையிலிருந்து வந்ததும் அதிமுக – அமமுக  ஒன்றிணையுமா - அமைச்சரின் சூசக தகவல்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக – அமமுக கூட்டணி அமையுமா அல்லது ரெண்டு கட்சியும் ஒன்றிணையுமா என பல்வேறு கருத்துக்கள் தமிழக அரசியலில் உலா வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கட்சி உட்பூசலால் அந்த கட்சி இரண்டாக உடைந்தது. இதையடுத்து தினகரன் தலைமையில் அமமுக உருவானது. தற்போது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தலைமைலான அதிமுக ஆட்சி செய்து வந்தாலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுக – அமமுக இணையும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் ஏற்றுக் கொள்ளப்படுவாரா என்கிற கேள்விக்கு அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் பலத்தரப்பட்ட கருத்துகளை கூறி வந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தளில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தோ, தேர்தல் கூட்டணி குறித்தோ பேசக்கூடாது என அதிமுக தலைமை கூறியுள்ளதால் பொது வெளியில் பேசுவதை சமீப காலமாக அமைச்சர்கள் தவிர்த்து வருகின்றனர்.

அதேசமயம் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவிற்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுக வந்தால் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னரே அமமுகவினர் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என இ.பி.எஸ், ஓ.பி.எஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக – அமமுக கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றார். அதேசமயம் எதிர்கால அரசியலில் என்ன மாற்றம் நிகழும் என்பதை தற்போதைக்கு சொல்ல முடியாது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after release sasikala may be admk ammk join


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->