தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை திட்டத்தை சீர்குலைத்த திமுக அரசு.! கொந்தளிப்பில் அதிமுக வெளிநடப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்குகிறது என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த வெளிநடப்பு பின்னர் செய்தியாளர்களை தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவிக்கையில்,

"அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்குவது குறித்து அவையில் பேச அனுமதி வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக உறுப்பினர் கேபி முனுசாமி அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது. ஓரிரு நிமிடங்கள் மட்டுமே அனுமதி கொடுப்பதாக அறிவித்தார். அந்த நேரத்தில் மாண்புமிகு உறுப்பினர் கேபி முனுசாமி அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்.

அந்த கருத்தையும் அவைக்குறிப்பில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து நான் எழுந்து அவசர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து மாண்புமிகு உறுப்பினர் அண்ணன் கேபி முனுசாமி பேசுவதற்கு நீங்கள் வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினேன். ஆனால் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நான் ஒரு சில கருத்துக்களை சொல்ல விழைந்தேன். அதற்கும் அவர் அனுமதி தரவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வீட்டில் பிறந்த மகளிர்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. பாரதப் பிரதமர் மோடி அவர்களால் இதே கலைவாணர் அரங்கில் தொடங்கி வைக்கப்பட்ட அற்புதமான திட்டம். அந்த திட்டத்தை இந்த அரசு கைவிட்டுவிட்டது.

அதுமட்டுமல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதனை திமுக அரசு ரத்து செய்துள்ளது. பெண்கள் உரிய நேரத்தில் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்காக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால் அந்தத் திட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, திட்டத்தை சீர்குலைய முடிவு செய்து உள்ளது திமுக அரசு. இதெல்லாம் குறித்து அவையில் பேசுவதற்கு அனுமதி கேட்டேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk warn for thalikku thankam thittam


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->