சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றமா.? அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், கட்சி நிர்வாகிகளுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், தஞ்சை அதிமுக மண்டல தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும்  ஆலோசனை கூட்டம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது. அதில் தொழில்நுட்பப் பிரிவு கையேடு மற்றும் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். 

அந்தக் கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனைகளை இளைஞர்கள் இணையதளம் மூலம் பொது மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்கள் தேவையற்ற பதிவுகளை பதிவு செய்து வருகின்றது. ஆனால், 9 ஆண்டு காலம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்ல தயாராக இருக்க வேண்டும் நாம். தேவையான பதிவுகளை மட்டும் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பிறகு, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கிசான் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு யார் காரணம் இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும். மேலும், சசிகலா வெளியே வந்தவுடன் அதிமுகவில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த வைத்திலிங்கம், கற்பனைகள் எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும், அவர் வெளியே வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk vaithilingam press meet about sasikala release


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->