அடுத்தடுத்து இரண்டு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்.! அதிர்ச்சியில் இபிஎஸ்., ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் செப்டம்பர் 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்களி ன் வீடுகளுக்கு நேரில் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

பரிசோதனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

இந்த நிலையில் செய்யாறு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தூசி மோகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுக தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ். பி. சண்முகநாதனுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய பட்டு இருப்பது அதிற்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk two mla corona positive


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->