சூடு சொரணை இருக்கா திமுக? ஸ்டாலின், உதயநிதியை வெளுத்து வாங்கும் அதிமுக.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில், திமுக தனது மிகப்பெரிய ஒரு தேர்தல் வாக்குறுதியாக 'திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து' என்ற ஒரு வாக்குறுதி கொடுத்தது. 'முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து' என்ற பிரச்சாரத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், திமுகவில் உள்ள தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியை பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதிலும் ஸ்டாலின் மகன் உதயநிதி ஆட்சியாளர்களுக்கு வெக்கம், மானம் சூடு, சொரணை இருக்கா என்று கேட்க., அதே கேள்வியை இன்று ஸ்டாலின் மகனை பார்த்து சமூக வலைதளங்களில் #உதாரு விட்ட உதய்., நீட் ரத்து எங்கடா.? என்ற ஹேஸ்டேக் மூலம் நெட்டிசன்கள் கேட்கின்றனர்.

ஆம், இன்று திமுக சொன்ன வாக்குறுதி பொய்யாய் போய் தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கிடையே, நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இன்று அதிகாலை ஒரு உயிர் பலியாகி உள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்தவர் விவசாயி சிவகுமார் மகன் நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளான். 

திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஆன நிலையில், நீட் தேர்வு குறித்த பாதிப்புகளுக்கு ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. மற்றபடி நீட் தேர்வு ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை.'

இந்நிலையில், அதிமுகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில், "அன்று அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்து பொய்யான வாக்குறுதிகளால் ஆட்சிக்கு வந்த நீங்கள், நீட் தேர்வால் இன்று உயிரை பறிகொடுத்த மாணவனின் குடும்பத்திற்கு பதில் சொல்ல திராணி உள்ளதா? உங்களுக்கு #சூடு_சொரணை_இருக்கா_திமுக  இது எல்லாமே நீங்கள் கேட்ட கேள்வி தான் ஸ்டாலின், உதயநிதி" என்று பதிவிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk twitter page post


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->