யார் குடியை கெடுக்க? மு க ஸ்டாலின் வைத்த ஆப்பை திருப்பி வைத்த அதிமுக.. பரபரப்பில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், ஜூன் மாதம் 21 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,  27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து உள்ள 27 மாவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்படும்.

கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மதுபானக்கடைகள் செயல்படாது " என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து அதிமுக வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் டாஸ்மாக்-க்கு பெரும்பங்குண்டு என தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என தெரிந்தும், முக ஸ்டாலின் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது யார் குடியை கெடுக்க? என கேள்வி எழுப்பியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk tweet for tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->