#BREAKING: அதிமுக அமைச்சர் வீட்டில் தமாக நிர்வாகிகள்.! சற்றுமுன் தொடங்கியது பேச்சுவார்த்தை.! - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. இன்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதுகுறித்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவிக்கையில், "அதிமுகவுடன் இன்று நாங்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இதற்காக அதிமுக தரப்பில் ஏற்பட்ட குழுவினருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களை வகுத்துள்ளது. நிச்சயமாக சட்டப்பேரவையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும். அதற்கு ஏற்றாற் போலவே இந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சற்று முன்பு சென்னையில் அதிமுக -தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK TMC alliance 1st round


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->