வேலூர் தேர்தலில் அதிமுகவின் ப்ளஸும், மைனஸும்.! இந்த கட்சி தானாம்.!  - Seithipunal
Seithipunal


முன்னதாக நடைபெற இருந்த வேலூர் தேர்தல் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கூறியதால், தடுத்து நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் தேர்தல் நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக சார்பாக ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்களே மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

vellore election, seithipunal

வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக திமுக சார்பில், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திமுக தனது தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. இதுபோல, அதிமுகவின் கூட்டணி வேட்பாளரான ஏசி.சண்முகம் நேற்று அவரது பிரச்சார பயணத்தை துவங்கியுள்ளார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த வேட்பு மனு தாக்கல் நடைபெறும் போது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர்.

rajini, seithipunal

இந்நிலையில் பாஜக அதிமுக கூட்டணி இடையே சுமூகமான சூழல் இல்லை என தெரிகிறது. மேலும், வேலூரில் இஸ்லாமியர்களை அதிகம் இருப்பதால், பாஜகவினர் பிரச்சாரத்திற்கு வருவதை அதிமுகவினர் அவரசியமா என யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், ரஜினியின் ஆதரவு பாஜகவிற்கு இருக்கும் என்பதால், வேலூரில் அதிகப்படியான ரஜினி ரசிகர்களை ஆதரவை இது பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk thinking about bjp coalition


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->