அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்! அதிர்ச்சியில் திமுக!  - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என நேற்று ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாது சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிமுக கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது தெரியவந்துள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளான பாமக தேமுதிக தமாகா  போன்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

பாமக தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏகே மூர்த்தி, அரங்க வேலு, முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் தன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டவரும், தேமுதிக தரப்பில் அழகாபுரம் மோகன்ராஜ்,  பார்த்தசாரதி ஆகியோரும்,  தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் ஆகியோரும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளார்கள். 

உள்ளாட்சி தேர்தலே இன்னும் அறிவிக்காத நிலையில் அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தையை முன்னறிவிப்பின்றி நடத்துவது, ஆரம்பத்திலே அதிமுக வேகம் காட்டுவது திமுக தரப்பில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk speak with pmk dmdk tmc about local body coalition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->