பேனர் விவகாரத்தில் இப்படி ஒரு பதிலை கூறிய அதிமுக.!  - Seithipunal
Seithipunal


சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் சுபஸ்ரீ (23), கனடா செல்வதற்காக தேர்வு எழுத சென்று முடித்து விட்டு பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் இருந்து பல்லாவரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த போது, பேனர் சரிந்து விழுந்ததில் பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  

இந்நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பல அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர். 

suba sri, seithipunal

அதில், " மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்களை அதிமுகவினர் வைக்கக்கூடாது என்றும், அதிமுக குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் இனி பேனர் கட் அவுட்டுகள் வைக்க கூடாது என்றும், 

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைப்பதை அதிமுகவினர் தவிர்க்க வேண்டும் என்றும், இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என்பதை அதிமுகவினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk says stop to stick banner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->