சசிகலாவிற்கு எதிராக அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.! அதிர்ச்சியில் சசிகலா.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவை மீட்க தாம் அரசியலுக்கு வர இருப்பதாகவும், விரைவில் தொண்டர்களை சந்திப்பதாகவும் சசிகலா அமமுக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோ வெளியாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக சசிகலாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசி அதிமுகவினர் 15 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு கூட இருக்க தகுதி இல்லாதவர் என தீர்மானத்தை வாசித்தார்.

மேலும், சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் ஜெயலலிதா வீண் பழியைச் சுமந்து சிறைக்கு சென்றார். அந்த கொள்ளையால்தான் சசிகலா சிறைக்கு சென்று நான்கு ஆண்டு களி சாப்பிட்டார் என விளாசித் தள்ளினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk resolution against sasikala


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->