அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. தற்போது திமுக மற்றும் அதிமுகவுக்கு தலா மூன்று இடங்கள் கிடைத்துள்ளது. சில நாட்கள் முன்பு திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதன்படி, திருச்சி சிவா, என் ஆர் இளங்கோ, அத்தியூர் செல்வராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றன. சில நாட்கள் முன்பு திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பல நெருக்கடிகளுக்கு பிறகு  அதிமுக தங்கள் வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதன்படி, அதிமுக தம்பிதுரை, கேபி முனுசாமி, கூட்டணி கட்சியை சேர்ந்த ஜி கே வாசன் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என அதிமுக அறிவித்தது.

இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, கே.பி.முனுசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk rajyasabha candidate nomination


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->