அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்.. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுகவினர்.! ஒட்டப்பட்ட போஸ்டர்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தலைமையில் பல்வேறு குளறுபடிகள் நடந்து வருகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகின்றனர். 

2021-ம் ஆண்டு நறைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை தற்போது வெடித்து வருகிறது. சமீபத்தில், திண்டுக்கல் மாவட்ட அதிமுக இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டார். மேலும், மேற்கு மாவட்ட செயலாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். 

தற்போது, அதிமுகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்த கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் தமிழக முதலமைச்சர் ஓபிஎஸ் என்றும் துணை முதலமைச்சர் இபிஎஸ் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. இது அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த போஸ்டரில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஓபிஎஸ் என்றும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் இபிஎஸ் என்றும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்ததற்கு நன்றி., நன்றி., என அச்சிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk poster issue ops and eps shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->