யாரும் வாய் திறக்க கூடாது.. எச்சரிக்கை விடுத்த அதிமுக தலைமை.! எதற்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சில நாட்கள் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஒற்றை தலைமையில் அதிமுக கட்டுபாட்டுடன் கொண்டு செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. 

ஒரே தலைமை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழு வலியுறுத்துவோம். அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்கவேண்டும். ஆளுமை திறன் உடைய ஒருவர் தலைமையில் இல்லை. 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில்  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசப்படவில்லை. 

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த அடுத்த கட்ட அரசியல் பணிகளை தொடங்கி இருக்கும் நிலையில், கட்சியின் செய்தி தொடர்பாளர், தலைமை கழகத்தில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஒரு ஊடகத்திற்கு, பத்திரிகைகளும், சமூகத் தொடர்பு சாதனங்களுக்கு எத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அவை, பின்வருமாறு:

உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்காக தீவிரமாக பணியாற்ற உறுதியேற்றனர்.

மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம்

நாட்டின் பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவிற்கு பாஜக வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தீர்மானம்.

English Summary

admk ordered for party members


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal