உள்ளாட்சி தேர்தல் மூன்று அமைச்சர்களுக்கு புதிய பொறுப்பு.! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கின்றது.  கடந்த 8ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி தமிழகம் முழுவதும்  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கு இன்று கடைசி நாளாகும்.

உள்ளாட்சித் தேர்தல் திமுக,அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் தயாராகி வருகின்றன.

இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில், போட்டியிடும், வேட்பாளர் பட்டியலை, அதிமுக இரு கட்டங்களாக வெளியிட்டது.

இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். அதன்படி, ஈரோடு-செகோட்டையன்,  நாமக்கல்-தங்கமணி, கோவை-எஸ்.பி.வேலுமணி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு நல்கி அதிமுகவினர் தேர்தல் பணியாற்ற வேண்டும் என ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ops and eps new post for three ministers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->