தினகரனை விடாமல் அடிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்! பெரும் சோகத்தில் தினகரன்!   - Seithipunal
Seithipunal


அதிமுகவில் இருந்து பிரிந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை பதிவு செய்வதற்கு தினகரன் தரப்பு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் பொதுவாக ஒரு சின்னத்தை பெற்று அனைத்து தொகுதிகளிலும் சுயேச்சையாக போட்டியிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்கள், அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார்கள். 

இதனையடுத்து தற்போது கட்சிக்கு நிரந்தர சின்னம் பெறுவதற்காக, கட்சியினை பதிவு செய்யும் பணியில் அமமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது அமமுக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் மீதான,  விசாரணை ஆனது  தேர்தல் ஆணையத்தில் தொடங்கியுள்ளது. அமமுகவை கட்சியாக பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டுள்ளதாக அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அதேபோல அதிமுக அல்லாத வேறு மூவரும் அமமுகவை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எனவும், அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கத்தை தாங்கள் அளித்து உள்ளோம் எனவும்  ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மக்களவை பொதுத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வேலூர் தேர்தல், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடாத அமமுக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எனவும், அதில்  பதிவு செய்யப்பட்ட கட்சியாக போட்டியிடும் எனவும் தினகரன் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் வாய்ப்பு இருக்கும் நிலையில், கட்சியை பதிவு செய்வதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு கட்சியாக அமமுக போட்டியிட முடியுமா? என்ற சந்தேகம் தற்போது நிலவி வருகின்றது. ஏற்கனவே முக்கிய நிர்வாகிகள் விலகிய நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடாத சூழல் உருவானால் கட்சி கலகலத்துவிடும் என தினகரன் கடும் சோகத்தில் இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk oppose to ammk for its registration as party in election commission office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->