காங்கிரஸிலிருந்து அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளிக்கு அடித்தது அதிர்ஷ்ட்டம்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டிக்கு, அதிமுக தலைமை புதிய பொறுப்பை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும். தமிழக  துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், அதிமுகவின் இணைஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"தொலைக்காட்சிகள் மற்றும் இன்ன பிற சமூக தொடர்பு ஊடகங்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில், அப்சரா ரெட்டி அவர்களும் இன்று முதல் இணைத்துக் கொள்ளப் படுகிறார்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில், கழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைப்பதாக அப்சரா ரெட்டி அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்." என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk new posting nov 28


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->