#BigBreaking | திடீரென சாலையில் அமர்ந்த சிவி சண்முகம் எம்.பி., ஒன்று கூடிய அதிமுகவினர்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டிருந்த கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததாக கூறி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி வி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட நகராட்சி பகுதிகளுக்கும், கிராம பகுதிகளுக்கும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மரக்காணம் பகுதியில் 1550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம், விழுப்புரம் காந்தி சிலை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

போராட்டத்தின் போது பேசிய சிபி சண்முகம், "கடல் நீரை குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது. இதனை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தவில்லை என்றால் அதிமுக தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" என்ற ஒரு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mp cv shanmugam protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->