அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள்., இறுதிசெய்தாரா எடப்பாடி கே பழனிச்சாமி? வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


மாநிலங்களவைத் தேர்தலுக்கான 2 வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

நாடு முழுவதும் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக சார்பில் இருவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.

இதில் பெரும்பான்மையாக உள்ள சமுதாய அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான உயர்நிலை கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர். இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுத்து இறுதி செய்வதற்கு தயாராக இருந்த போதும், தற்போது வரை ஒரு இறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிலை உள்ளதாக சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mp candidate issue may 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->