முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி., பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


முதல்வர் பழனிசாமிக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி., பரபரப்பு பேட்டி!  

வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பபட்டன. இந்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை சம்பந்தமான 3 வேளாண் மசோதாக்களையும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தாக்கல் செய்தார். இந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய அதிமுக எம்.பி., எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், 'வேளாண் மசோதாக்களால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்படுவதோடு நிலம் வைத்துள்ள விவசாயிகள் விவசாய பணியாளர்களாக மாறும் நிலை ஏற்படும், ஒப்பந்தம் அளவிலான விவசாயம் உலகளவில் தோல்வியடைந்த முறை என்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் இதனால் பயன்பெறும்' என்றார். 

முன்னதாக, வேளாண் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று தமிழக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை எதிர்த்தது ஏன்? என்று, டெல்லியில் அதிமுக எம்.பி., எஸ்.ஆர். பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். "தங்கள் கருத்துகளை கூற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. எனது கருத்துகளை நான் தெரிவித்தேன். மசோதாவை எதிர்த்து வாக்களிக்கவில்லையே?." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mp balasubramaniyan press meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->