கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியை கழட்டிவிட போகும் அதிமுக.! கலக்கத்தில் கூட்டணி கட்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது அதிமுக-பாஜக கூட்டணியில் தலைமை யார் என்பதையும் தாண்டி இரு கட்சிகளும் இடையே கூட்டணி இருக்கிறதா.? இல்லையா.? என்ற விவாதம் தற்போது தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி சலசலப்பு தற்போது இந்த ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயகுமார் இடம், புனித ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என பாஜக தலைவர் எல். முருகன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடிதான் பறக்கும் என பதில் அளித்தார். 

அதையடுத்து, சென்னையில் அதிமுக எம்பி பாலசுப்ரமணியன், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசில் அதிமுக அங்கம் வகிக்கவில்லை. மாநில அரசில் பாஜக அங்கம் வகிக்கவில்லை என தெரிவித்தார். ஆனால், மதுரையில் செய்தியாளர்களிடம் எல் முருகன் பேட்டி அளித்தபோது, அதிமுக-பாஜக கூட்டணி இடையே எந்த ஒரு மனக்கசப்பும் ஏற்படவில்லை என தெரிவித்திருந்த நிலையில் அதிமுக எம்பி அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mp balasubramaniam press meet about bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->