முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. அதிர்ச்சியிலும்.. குழப்பத்திலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.

நேற்று மாலை 5 மணியளவில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு வருகை தங்கியிருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வருகையில் இ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் - ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், கூட்டத்திலும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதுகுறித்து, அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 10.5.2021 திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 24 தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mlas meeting on may 10


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->