எம்.எல்.ஏவின் கணவர் தோல்வி.. சோகத்தில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 27ந் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 76 புள்ளி ஒன்று ஒன்பது சதவீத வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த 46 ஆயிரத்து 639 ஊரக ஊராட்சித் பதவிகளுக்கான தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது இதில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின.

9624 ஊராட்சிமன்ற தலைவர், 76746 ஊராட்சிமன்ற உறுப்பினர், 5,090 ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் 515 மாவட்ட குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் பதிவான வாக்குகளில் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சேலம் மாவட்டம் மண்ணசநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக எம்.எல்.ஏவின் கணவர் தோல்வியை தழுவினார், அதிமுக எம்.எல்.ஏ., பரமேஸ்வரியின் கணவர் முருகனை எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீதர் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். எம்.எல்.ஏ கணவர் தோல்வியை சந்தித்ததால் அதிமுக தொண்டர்கள் சோகத்தில் உள்ளனர்.

இதே அதே மண்ணசநல்லூரில் 1 வது வார்டில் போட்டியிட்ட ஸ்ரீதரின் மனைவி கீதா ஸ்ரீதர் தோல்வியை தழுவியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla husband lost in election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->