அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக MLA .! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராகவும், அந்த கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருபவர் குமரகுரு. இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் (10 தேதி) அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரகுருவை சிகிச்சைக்காக அவசரமாக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்துள்ளனர்.

 


இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சென்னை அப்போல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk mla admitted in apollo hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->