நேரடி மோதலில் ஈடுபட்ட அதிமுக - தமிழகத்தில் தனி மரமாகிறதா பாஜக..? அமைச்சரின் தடாலடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


“தமிழகத்தில் தாமரை மலரப்போவதில்லை, தமிழக அரசுக்கு தமிழிசை சான்றிதழ் கொடுக்க தேவையில்லை” என அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கூறினார்.

கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமைவகித்தார். இதில் சிறப்புஅழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டார்.

இதன் பின்பு அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “தமிழகத்தில் தாமரை மலரப் போவதில்லை. தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி இருக்கா? இல்லையா? என்று மக்கள் தான் சொல்ல வேண்டும். தமிழிசை சௌந்தர்ராஜன் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை.

தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக திராவிட பாரம்பரிய ஆட்சி நடைபெறுகிறது.ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் அல்லது நோட்டாவைவிட அதிக வாக்குகளை பாஜக வாங்கினால் நல்லது. மீண்டும், மீண்டும் அதிமுக ஆட்சியை மக்கள் அமைத்து தந்து இருக்கிறார்கள் என்பதனை தமிழிசை சௌந்தரராஜன் தெரிந்து கொண்டால் நல்லது என்றார்.

மேலும், கடம்பூர், வில்லிசேரி, சத்திரப்பட்டி, கயத்தார், எட்டயபுரம் - பருவக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் ஒதுக்குபுறமாக இருந்ததால் சாலைபணிகள் விரைவில் முடிக்கப்பட்டது.

லெட்சுமி மில் முதல்ரயில்வே மேம்பால வரையிலான பகுதி நகரத்தின் மைய பகுதி காலம் காலமாக வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அதன் பின்பு மரங்கள் மின்கம்பங்கள் அகற்ற உரிய அனுமதி காலதாமதம் ஏற்பட்டது. பொங்கலுக்கு முன்பாக லெட்சுமி மில் முதல் ரயில் தொடங்கப்படும்' என்று கூறியுள்ளார்.

English Summary

admk minster oppose bjp tamilnadu leader


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal