நார்நாராக கிழிக்கப்பட்ட திமுக.! கரூரில் ஒரு தரமான சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற எம்ஜிஆர் பொதுக்கூட்ட விழாவில் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது அவர், "அறிஞர் அண்ணா இறந்தவுடன் ஆட்சிக்கு வர துடித்தவர் கருணாநிதி. அப்பொழுது எம்ஜிஆரினால் தான் அவர் முதல்வரானார். எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னர் இரும்பு மங்கையாக எம்ஜிஆரின் வழியில் ஆட்சி நடத்தியவர் நமது மறைந்த முதல்வர் ஜெயலலிதா." என்று அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்," ஐநா சபையே புகழும் அளவிற்கு திட்டங்களை கொடுத்தவர் டாக்டர் எம்ஜிஆர். சத்துணவு கொடுத்த நாயகன் எம்ஜிஆர் தான். ஆனால், கருணாநிதி மாணவர்களைத் தட்டு ஏந்த வைத்துவிட்டார். திராவிட இயக்கம் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் எம்ஜிஆரும் ஒருவர்.

அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் நெடுஞ்செழியன் முதல்வர் ஆகி இருக்க முடியும். அவரை, இடைக்கால முதல்வராக வைத்து எம்ஜிஆரின் உதவியுடன் கருணாநிதி முதல்வரானார். 10,000 கிலோ மீட்டர் தொலைவிற்கு படுத்துக்கொண்டே ஜெயித்தவர் தான் எம்ஜிஆர். எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்னர் ஜா அணி, ஜெ அணி என்று இரண்டாக பிரிந்த பொழுது இரும்பு மங்கையாக இருந்து அதிமுகவை வழிநடத்தியவர் ஜெயலலிதா.

vijayabaskar seithipunal

தேர்தலின்போது கருணாநிதி இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக பொய்யுரைத்து வாக்குகளை பெற்றார். அப்பொழுது சட்டசபையில் அதுகுறித்து ஜெயலலிதா கேள்வி எழுப்பியதற்கு கையளவு நிலம் தருவேன் என்றும், அதை என் உள்ளத்தில் உங்களுக்கு கொடுப்பேன் என்றும் கூறி கருணாநிதி தப்பித்தார். 

ஆனால், கருணாநிதி இறந்த பிறகு அதிமுக ஆட்சியில் அவருக்கு ஆறுக்கு இரண்டடியில் நாங்கள் இடம் கொடுத்துள்ளோம். பெரும்பான்மை வாய்ந்த காங்கிரஸ் கட்சி இரண்டு முறை சின்னத்தை இழந்து இருக்கின்றது. ஆனால், இருமுறை இழந்த சின்னத்தை மீட்ட வரலாறு இந்திய அளவில் அதிமுகவிற்கு மட்டுமே இருக்கின்றது. அம்மாவின் மறைவிற்குப் பின்னர் கூட கட்சி இரண்டானது.

ஆனால், ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் இணைந்து தற்போது அதிமுகவை பலப்படுத்தி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். பலரும் இன்னும் ஒரு அமாவாசை, இரண்டு அமாவாசை என்றெல்லாம் தெரிவிக்கின்றனர். அப்படி எல்லாம் கிடையாது. 12 அமாவாசை அல்ல 15 அம்மாவாசை அதிமுக ஆட்சி நடக்கும். அதன் பின்னர் மீண்டும் 60 அமாவாசை இந்த ஆட்சி மக்களுக்கு திட்டங்களை கொடுக்கும். " என்று அவர் தொடர்ந்து பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk minister speech in karur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->