பிரபல தொலைக்காட்சிகள் மீது புகார்..! உரிமை மீறுவதாக கொந்தளித்த அதிமுக அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


17 ஆம் தேதி முதல் பட்ஜெட் மீதான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. நேற்று நடந்த கூட்டத்தொடரின் போது திமுக எம்.எல்.ஏவான மனோ தங்கராஜ், "மதுக்கடைகளை அரசு மூடுவதாகக் கூறி இருக்கின்றது. ஆனால், இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. மதுவால் வருவாய் அதிகமாகக் கிடைப்பதாக கூறபடுகிறதே.?" என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். 

இதற்கு அமைச்சர் தங்கமணி, "தமிழகத்தில் மதுவிலை உயர்த்தபட்டுள்ளதால் தான் வருவாய் அதிகமாகக் கிடைத்துள்ளது. படிப்படியாக தான் மதுவிலக்கை அமல்படுத்துவோம். திமுக ஆட்சியில் கூடதான் மது விற்பனை வருவாய் அதிகமாக இருந்தது." என்று தெரிவித்ததாக பிரபல இரு செய்தி நிறுவனங்கள் செய்தியை வெளியிட்டது. 

இதுகுறித்து அமைச்சர் தங்கமணி தான், "மது குடிப்பவர்கள் அதிகரித்த காரணத்தால் தான் வருவாய் அதிகரித்துள்ளது."என்று தான் கூறினேன். ஆனால், அந்த தொலைக்காட்சிகள் செய்தியை திரித்து பரப்பியுள்ளன என்று அமைச்சர் கூறியுள்ளார். 

எனவே, உரிமை மீறல் கருத்துக்கள் காரணமாக குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சார்பில் புகார் எழுந்து இருக்கின்றது. இந்த புகாரை உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்புகிறோம் என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk minister report to 2 news channel


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->