திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் மகிழ்ச்சியில் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சரான ராஜகண்ணப்பன் கடந்த 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், முக்கிய துறையான பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார். அதன்பின்னர் சில காரணங்களால் மக்கள் தமிழ்தேசம் என்ற தனிக்கட்சியை தொடங்கி செயல்பட்டு வந்தார் அந்தக் காலத்தில் 2001ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம்பெற்று, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார். பின்னர் 2006ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு இளையான்குடி தொகுதியில் வெற்றியும் பெற்றார் இதன்பின்னர்  2009ஆம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் இணைந்தார்

 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிமுகவிலிருந்து வெளியேறினார் 

இந்நிலையில்  நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்  திமுகவிற்கு ஆதரவை தெரிவித்த ராஜகண்ணப்பன் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரமும்  செய்தார்

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேற்று சந்தித்த பிறகு பேசிய அவர், தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார். 4 தொகுதி இடை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும், இந்த தொகுதிகளில் அ.தி.மு.க-வின் தோல்வி உறுதி என்றும் தேர்தல் முடிவுக்கு பிறகு, தி.மு.க-வில் இணைவது பற்றி ஆதரவாளர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk minister join to dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->