மொத்தம் 5 நாள்.! தயாராகும் அதிமுக தொண்டர்கள்.!! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தலைமை.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களின் 71-வது பிறந்த நாள் கொண்டாட்டம், வரும் பிப்ரவரி 24-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 5 நாட்கள் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அந்த செய்தி குறிப்பில், ''அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந்தேதி வரை அம்மாவின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதற்கான பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவினர் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் இணைந்து அம்மா பிறந்த நாளை சிறப்பாக நடத்த வேண்டும்.

தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 24.2.2019 அன்று ஆங்காங்கே அம்மா சிலைக்கு அல்லது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK JEYALALITHA BIRTHDAY CELEBRATION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->