"தாலமுத்து"வா...? ''விடியா அரசின் வெட்கக்கேடான செயல்... ஜெயக்குமார் வேதனை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ் மொழியை காக்க நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இந்த ஆண்டும் மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகளான நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் என்பதால் அந்த நினைவு மண்டபம் சீரமைக்கப்பட்டு புதிதாக வர்ணம் பூசப்பட்டது.

மொழிப்போர் தியாகிகளான நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவு மண்டபத்தில் மொழிப்போர் தியாகி தாளமுத்துவின் பெயரை "தாலமுத்து" என எழுதப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து நடராஜன் ஆகியோரை நினைவுக்கூறும் இந்நாளில் தமிழ் மொழியை வளர்ப்பதாக பொய் பரப்புரை செய்யும் விடியா அரசு தாளமுத்துவின் பெயரை சிதைத்து இருப்பது வெட்கக்கேடானது! வேதனைக்குரியது!" என பதிவிட்டுள்ளார்.

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகியின் பெயரை சரியாக எழுதாத அளவிற்கு திமுக அரசு மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாக இணையதள வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar condemned for misspelling language war martyr name


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->