தமிழக அமைச்சரவையில் ஏற்படப்போகும் மாற்றம்? திமுகவுக்கு தாவப்போகும் அமைச்சர்கள்!! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று வந்த பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் இருந்து, திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர முதலமைச்சர் முடிவு செய்து இருந்தாக கூறப்படுகிறது. அதனால் அமைச்சர்கள் பதட்டமான சூழ்நிலையில் இருந்துவந்தனர்.

இது குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பெஞ்சமின், ராஜலட்சுமி உள்ளிட்ட நான்கு அமைச்சர்களை நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், குமரகுரு, ராஜன் செல்லப்பா, சதன் பிரபாகரன் மற்றும் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், முருகுமாறன் இவர்களில் நான்கு பேரை அமைச்சராக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், உளவுத்துறை இது தொடர்பாகக் கொடுத்த ஒரு ரிப்போர்ட் முதலமைச்சரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த ரிப்போர்ட்டில், ஏற்கனவே மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து, இவர் திமுகவோடு தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. 

தற்போது நான்கு பேரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால் அவர்களும் திமுகவிற்கு மாறிவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சரவை மாற்றத்தை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk intelligence report eps is shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->