விஜயகாந்துடன் அதிமுக அமைச்சர்கள் சந்திப்பு.! யாரும் எதிர்பாராத தகவல் கசிந்தது.!  - Seithipunal
Seithipunal


கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வரும் சட்டமன்ற தேர்தலிலும் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

அதிமுக உடனே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர், தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின் பொது கூட்டணி, தொகுதி பங்கீட்டுது குறித்து முதல்கட்டமாக பேசிச்சுவார்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துள்ளனர். 

அதிமுக அமைச்சர்கள் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசியது, உடல்நல விசாரிப்பு என்றே அதிமுக தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன.

முன்னதாக நேற்று அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல், அதிமுக - பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் நேற்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk heads meet dmdk head


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->