அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்த நிர்வாகிகள்.! இன்றே கடைசிநாள்.! - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதனை அடுத்து அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை, விருப்பமனு, வேட்பாளர் நேர்காணல் உள்ளிட்ட பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் என்பதால், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளார்.

கடந்த மாதம் 24-ந் தேதி முதல் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் விருப்ப மனு வினியோகம் தொடங்கி நடந்து வருகிறது. விருப்ப மனு வினியோகம் இன்றுடன் நிறைவடைகிறது.

நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதிக்கும்,
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் மைத்ரேயன் மயிலாப்பூர் மற்றும் வேளச்சேரி தொகுதிக்கும், 
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆரணி தொகுதிக்கும், 
முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல் மதுராந்தகம், செய்யூர் தொகுதிக்கும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

இன்று இறுதிநாள் என்பதால் அ.தி.மு.க. அலுவலகமே தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பியுள்ளது. இதுவரை 5500-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK HEAD OFFICE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->