#BigBreaking | புதிய பெயர்., சற்றுமுன் அதிமுக தலைமை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சியின் தலைமை கழகத்திற்கு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகை’ என பெயர் சூட்டி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுக தலைமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 'எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே' என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளை அவரது உடன்பிறப்புகளின் இதயத் துடிப்பாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு விழாவை தமிழ்நாட்டிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் பின்வரும் வகையில் ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பித்து வகையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்த வேண்டும். 

பொன்விழா கொண்டாட்டம் இலச்சினை (லோகோ) வெளியிடுதல். 
பொன்விழா இலச்சினை பதிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்கள் கழகம் முன்னோடிகளுக்கு அணிவித்தல்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது படங்கள் தமிழகத்தின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையிலான லோகோவுடன், ஒரேமாதிரியான பதாகையில் மற்றும் சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் புதுப்பொலிவுடன் அமைத்தல்.

கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள், இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்கள் அமைத்தல்.

கழகத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கவுரவித்தல்.

கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சு போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை மாநிலம் முழுவதும் நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களுக்கு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பொன் விழா மாநாட்டில் சான்றிதழும் அளிக்கப்படும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை கழக வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை 'மக்கள் தொண்டில் மகத்தான 50 ஆண்டுகள்' என்ற தலைப்பில் குறிப்பேடாக அச்சடித்து வழங்குதல்.

தலைமைக் கழகத்திற்கு 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை' என பெயர் சூட்டல்.

தலைமை கழக பேச்சாளர் மற்றும் கலை குழுவினரை கௌரவித்து உதவி செய்தல்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கக் கூட்டங்கள் நடத்தி அந்தந்த மாவட்டத்திலுள்ள ஆரம்பகால உறுப்பினர்களுக்கு பொன்விழா நடத்தி நினைவு நாணயம் பதக்கம் வழங்குதல். உறுப்பினர் பெயர் விவரம் எழுதப்பட்ட சான்றிதழ் வழங்குதல். 

புரட்சித் தலைவரைப் பற்றியும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றியும், கழகம் பற்றியும் நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கௌரவித்தல்.

எம்ஜிஆர் மன்றங்களிருந்து கழகப் பணிகளை தொடங்கிய மூத்த முன்னோடிகள் சிறப்பு செய்தல்.

கழக பொன்விழாவை பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில், வரலாற்று நிகழ்வுகளைக் கொண்ட விளம்பர படம் தயாரித்து தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்தல்.

பொன்விழாவை மேலும் சிறப்பு திரும்புகையில் கழக நிர்வாகிகள் தெரிவிக்கும் பல்வேறு ஆலோசனைகளையும் பரிசீலனை செய்து இந்தப் பொன்விழா ஆண்டில் நிறைவேற்றப்படும்.

ஜனநாயகத்திற்கு சாட்சியாக செல்லும் திவ்ய தேசமான இந்தியாவில், அரை நூற்றாண்டுகளாக மக்களின் இதய சிம்மாசனத்தில் நிறைய ஆசனமிட்டு அமர்ந்திருக்கும் இயக்கங்களில் ஒன்றுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

வாரிசு அரசியல், மதம் மற்றும் சாதி அரசியல் மனிதர்களை பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல் என்ற சிந்தனைகள் ஏதுமின்றி, எல்லோருக்கும் எல்லாமும் திகழ தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 49 ஆண்டுகளைக் கடந்து பொன்விழா காணும் இவ்வேளையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செயற்கரிய சாதனை படைத்திருக்கிறது.

அரசியல் இயக்கத்தை தொடங்கி விட்டு மக்கள் செல்வாக்கை தேடும் அரசியல் கட்சிகளுக்கு மாறாக, மக்கள் திரண்டு ஓர் அரசியல் இயக்கத்தை தொடங்குவதற்கான உத்தியோகம் கொடுத்த இயக்கம் என்றால் ,அது புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்" என்று அந்த அறிவிப்பில் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk head announce mgr malikai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->